search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு சதவீதம்"

    ஜம்மி-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 75.2 சதவீதம் வாக்குகள் பதிவாகின. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள்  கடந்த 17-ம் தேதி தொடங்கி 9 கட்டங்களாக  நடைபெறுகிறது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.



    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மூன்றாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில் 96 கிராம தலைவர் பதவி மற்றும் 1,437 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர்.

    மீதமுள்ள 358 கிராம தலைவர் பதவி மற்றும் 1,652 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 5,239 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க சுமார் 3.20 லட்சம் வாக்களர்கள் தங்களது ஜனநாயக கடமையை இன்று நிறைவேற்றினர்.

    இன்றைய தேர்தலில் ஜம்மு பகுதியில்  அதிகபட்சமாக 83 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 55.7 சதவீதமும், ஒட்டுமொத்தமாக 75.2 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

    கடந்த 17-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்தலில் 74.1 சதவீதம் வாக்குகளும், 20-ம் தேதி நடந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது நினைவிருக்கலாம். இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #Kashmirpanchayatelection
    சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானது. இருகட்டங்களிலும் மொத்தமாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #voterturnout #Chhattisgarhpolls
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி நடந்த தேர்தலில் சுமார் 76.41 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
     
    இரண்டாவது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. சில வாக்குச்சாவடிகளில் 5 மணிக்கு பிறகும் பலர் வாக்களிக்க ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்ததால் வாக்குப்பதிவுக்கான நேரம் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது, இறுதிகட்ட தேர்தலில் 6 மணி வரையில் 71.93 சதவீதம் வாக்குகள் பதிவுவானதாக தெரியவந்துள்ளது.



    இரண்டுகட்ட தேர்தல்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் சராசரியாக 74.17 சதவீதம் வாக்குகள் பதிவானதாக புதுடெல்லியில் இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேசிய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையாளர் உமேஷ் சின்ஹா குறிப்பிட்டுள்ளார். #voterturnout #Chhattisgarhpolls #Chhattisgarh2ndphasepolls
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடந்து முடிந்த இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தலில் 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. #Kashmirpanchayatelection
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. முதலில் நகராட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 8,10,13,16 தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இதேபோல், பஞ்சாயத்து தேர்தல்கள் இன்று (17-ம் தேதி) தொடங்கி 9 கட்டங்களாக நடைபெறவுள்ளது. நவம்பர் 17, 20, 24, 27,29 மற்றும் டிசம்பர் 1,4,8,11 ஆகிய தேதிகளில் இந்த ஒன்பதுகட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாத இயக்கத் தலைவர்கள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர். எனினும், கடந்த மாதம் நடைபெற்ற நகராட்சி தேர்தல்களில் மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

    இந்நிலையில், முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் கடந்த 17-ம் தேதி நடந்து முடிந்தது. ஜம்மு பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள், காஷ்மீர் பிராந்தியத்தில் 7 மாவட்டங்கள் என மொத்தம் 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரண்டாவதுகட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 2 மணிக்கு நிறைவடைந்தது.

    இந்த இரண்டாம்கட்ட தேர்தலில் 90 கிராம தலைவர் பதவி மற்றும் 1,069 கவுன்சிலர் பதவிக்கான நபர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 281 கிராம தலைவர் பதவி மற்றும் 1,286 கவுன்சிலர் பதவிக்கு மொத்தம் 4014 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் தகுதியானவர்களை தேர்தெடுக்க மொத்தம் 2,179 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.



    இன்றைய தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.1 சதவீதம் வாக்குகள் பதிவாகின, அதிகபட்சமாக ஜம்மு பகுதியில் 80.4 சதவீதமும், காஷ்மீர் பகுதியில் 52.2 சதவீதமும் பதிவாகியுள்ளது. ஜம்முவில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் மிக அதிகபட்சமாக 83.9 சதவிதம் வாக்குகள் பதிவானது.

    இன்றைய தேர்தலில் மிக மோசமாக அனந்த்பூர் மாவட்டத்தில் வெறும் ஒரு சதவீதம் வாக்குகளே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று பதிவான வாக்குகள் ஒன்பதுகட்ட தேர்தலும் முடிந்த பின்னர் எண்ணப்படும். #Kashmirpanchayatelection
    கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #Sarathkumar
    அவனியாபுரம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. எனவே அதிக இடங்களை பிடித்துள்ள கட்சி ஆட்சி அமைக்க வேண்டும்.

    கூட்டணி ஆட்சி என்றால் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து மந்திரிசபை அமைக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

    கர்நாடக தேர்தலில் முன் கூட்டியே சரியான கூட்டணி அமைத்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.

    தற்போது தமிழகம் முழுவதும் மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. இதனால் மண்வளம், நீர்வளம் பாதிக்கப்பட்டு உள்ளன. தண்ணீர் பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.


    வருங்காலத்தில் தண்ணீருக்காக போர் ஏற்படும். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் குறையிருந்தால் அதனை சமத்துவ மக்கள் கட்சி தைரியமாக சுட்டிக்காட்டும்.

    2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaElection2018 #Sarathkumar
    கர்நாடக தேர்தலில் இறுதிச்சுற்று முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் கட்சிகள் கைப்பற்றிய இடங்களையும், மொத்தத்தில் பெற்ற வாக்கு சதவீதத்தையும் தெரிந்து கொள்வோம். #KarnatakaElection2018
    பெங்களூரு:

    கர்நாடக மாநில சட்டசபையில் உள்ள 224 இடங்களில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

    மாலை 7 மணி நிலவரப்படி, பா.ஜ.க. வேட்பாளர்கள் 97 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 74 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்கள் 37 இடங்களில் வெற்றி பெற்றதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இதுதவிர, பா.ஜ.க. வேட்பாளர்கள் 7 இடங்களிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளனர்.

    இன்னும் 10 தொகுதிகளுக்கான முடிவுகள் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாக வேண்டியுள்ள நிலையில், இந்த தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தை பொருத்தவரையில் (மாலை 7 மணி நிலவரப்படி) காங்கிரஸ் கட்சி 38 சதவீதம் வாக்குகளையும், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. 36.2 சதவீதம் வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.4 சதவீதம் வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் 4 சதவீதம் வாக்குகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 0.3 சதவீதம் வாக்குகளையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

    இன்னும் 10 தொகுதி முடிவுகள் வெளியான பின்னர் இந்த வாக்கு சதவீதத்தில் சில புள்ளிகள் மாறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயநகர் தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததாலும், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அடையாள் அட்டைகள் கைப்பற்றப்பட்டதாலும் இந்த இரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. #KarnatakaElection2018
    ×